ஐபிஎல் 2023 போட்டியில், KKR அணிக்கு விளையாடும் ரிங்கு சிங்கை பாராட்டிய ரஜினி
நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளை அவ்வப்போது ரஜினிகாந்த் நேரில் கண்டு வருகிறார். சமீபத்தில் கூட, மும்பையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளை காண நேரில் வந்திருந்தார் ரஜினிகாந்த். அதை தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 போட்டிகளையும் ரஜினி அவ்வப்போது காண்பதுண்டு. அதை உறுதி செய்யும் விதமாக, சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) உடன் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) போட்டியை ரசித்து பார்த்துள்ளார். தொடர்ந்து அந்த போட்டியில் சிக்ஸராக விளாசி தள்ளிய ரிங்கு சிங்கிற்கு, தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்தாராம். இதை ரிங்குவே தெரிவித்தார். அவர் கூறியதாவது, "ரஜினி சார் என்னை போனில் அழைத்து பாராட்டினார். ஆனால் அவர் ஆங்கிலத்தில் பேசியதால் எனக்கு புரியவில்லை. சென்னை வரும்போது நேரில் சந்திக்கலாம் எனக்கூறினார்".