சமஸ்கிருத ஸ்லோகம், காளியின் ஒன்பது அவதாரங்கள்: மாமேரு நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஆடை பற்றி சில தகவல்கள்
முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் நேற்று நடைபெற்ற மாமேரு நிகழ்ச்சியில் அணிந்திருந்த லெஹெங்கா பற்றி தான் தற்போது ஊரெல்லாம் பேச்சு. அழகிய பிங்க் நிறத்தில், தங்க ஜரிகை உடன் கூடுதலாக அவர் தனது தாயின் அணிகலன்களை அணிந்திருந்தாக கூறப்படுகிறது. ராதிகா அணிந்திருந்த லெஹெங்காவில், துர்கா ஸ்லோகம் பொறிக்கப்பட்டிருந்தது, அவர் மதத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக கூறப்பட்டது. துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் ஸ்லோகங்கள் தங்க ஜரிகையின் ஓரத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. ராதிகாவின் காக்ராவை உருவாக்க 35 மீட்டர் பந்தேஜ் (பாந்தினி எனப்படும் குஜராத்தி புடவை வகை) பயன்படுத்தப்பட்டது.
பிரபல டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா உருவாக்கிய உடை
ராதிகாவின் மாமேரு நிகழ்விற்கான ஆடையை பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா தயாரித்துள்ளார். ராதிகாவின் காக்ராவில் பட்டு இழையோடிய அதே நேரத்தில், அவரது பிளவுஸ்-இல் விரிவான உலோக நூல் வேலைப்பாடு மற்றும் ஸ்வரோவ்ஸ்கி குஞ்சங்கள் இடம்பெற்றிருந்தன. ராய் பந்தேஜ் என்றழைக்கப்படும் tie - dye நுட்பத்தினை, பனாரசி ப்ரோகேட் துணியில் செய்து இந்த லெஹெங்கா உருவாக்கப்பட்டது. ராதிகா தனது 'மாமேரு' விழாவிற்காக, தனது தாயார் அவருடைய மாமேருவின்போது அணிந்திருந்த தங்க நகைகள் -காதணிகள், நெக்லஸ், நெத்திச்சுட்டி, வளையல்கள் மற்றும் அவரது ஜடையை அலங்கரித்த பிரமிக்க வைக்கும் அணிகலன்களை சேர்த்து கொண்டார். ராதிகா மெர்ச்சண்ட்-ஆனந்த் அம்பானி திருமணம், ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.