படம் ஹிட்டான புஷ்பா 3 கண்டிப்பா வரும்: தயாரிப்பாளர் உத்தரவாதம்
செய்தி முன்னோட்டம்
அல்லு அர்ஜுனின் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 'புஷ்பா 2: தி ரூல்' டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இது சார்ந்து சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் புஷ்பா 3 தயாரிப்பு பற்றி சூசகமாக தெரிவித்தார்.
"நீங்கள் அனைவரும் படத்தை பெரிய ஹிட் ஆக்கினால் உங்களுக்கு புஷ்பா 3 தருவோம்" என்றார். மேலும் கேட்டபோது, "புஷ்பா 3க்கு உறுதியான முன்னிலை உள்ளது. கண்டிப்பாக அது நடக்கும்" என்றார்.
இது அல்லு அர்ஜுனின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், பெர்லின் திரைப்பட விழாவில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். அப்போது அவரும் புஷ்பா 3 நிச்சயமாக நடக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Pushpa3 - Confirmed pic.twitter.com/XJclsnDNm6
— Aakashavaani (@TheAakashavaani) October 24, 2024
ரிலீஸ்
'புஷ்பா 2' ரிலீஸ்
புஷ்பா 2: தி ரூல் வெளியீட்டு தேதியை நேற்று போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்தது.
இப்படம், தற்போது டிசம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த புதிய வெளியீட்டு தேதியுடன் கூடிய டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
சுகுமார் இயக்கயுள்ள இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
புஷ்பா இரண்டு பாகங்களிலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார்.