
'புஷ்பா 2' ரிலீஸ்: டிசம்பர் 5ஆம் தேதி வருகிறான் புஷ்பா
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான புஷ்பா 2: தி ரூல் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகலாம் என ஏற்கனவே தெரிவித்தது போலவே தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட இப்படம், தற்போது ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The celebrations begin a day earlier 🥳
— Pushpa (@PushpaMovie) October 24, 2024
The fireworks at the box office will set off a day earlier 🔥
The records will be hunted down a day earlier 💥
Pushpa Raj's Rule will begin a day earlier ❤🔥
The Biggest Indian Film #Pushpa2TheRule GRAND RELEASE WORLDWIDE ON 5th… pic.twitter.com/AFckFRWt47
மாற்றங்கள்
'புஷ்பா 2' பல ரிலீஸ் தேதி மாற்றங்களை சந்தித்துள்ளது
குறிப்பிடத்தக்க வகையில், புஷ்பா 2: தி ரூல் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல.
முதலில் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு தள்ளி, படப்பிடிப்பு தாமதம் காரணமாக மீண்டும் டிசம்பர் மாதத்துக்குத் தள்ளப்பட்டது.
பின்னர், இது டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தற்போது டிசம்பர் 5 என முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.
புஷ்பா இரண்டு பாகங்களிலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
புஷ்பா 2: தி ரூல் என்பது புஷ்பா: தி ரைஸ் படத்தின் தொடர்ச்சியாகும்.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட இந்திய படங்களில் புஷ்பா 2 மிகவும் விலை உயர்ந்தது என்று கூறப்படுகிறது.