
விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு! அதிர்ச்சியில் ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. பான் இந்தியா படமாக வெளியான இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தீவிரமாக எடுத்து வருகின்றனர்.
விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று (மே 31) படத்தின் ஒரு சில காட்சிகளை முடித்துவிட்டு படக்குழு தெலுங்கானாவின் நல்கொண்டாவை நோக்கி வரும் வழியில், படக்குழு பயணித்த பஸ் விபத்துக்குள்ளானது.
இதில் படக்குழுவினர் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்ததாக தெரிகிறது.
ட்விட்டர் அஞ்சல்
விபத்துக்குள்ளான புஷ்பா 2 குழுவினர்
Pushpa 2 Team Meets With Road Accident, Crew Members 'Severely Injured'#Pushpa2 #roadaccident #AlluArjun pic.twitter.com/vp2VqNenSt
— News Express (@newsexpresslive) May 31, 2023