
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது; புதிய தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரம் வரை, இயக்குனர் சுகுமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'புஷ்பா: தி ரூல்' ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் வெளியீடு தள்ளி வைக்கப்படவிருப்பதாக கூறப்பட்டது.
இதனை அப்படத்தின் நாயகன் நடிகர் அல்லு அர்ஜுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிய வெளியீட்டு தேதியையும் அவர் அறிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை, அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் புஷ்பா 2: தி ரூலின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
அதில், "டிசம்பர் 6, 2024 முதல் திரையரங்குகளில் #புஷ்பா2 ரூல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புஷ்பா 2 பற்றி
முதல் பாகத்திற்காக தேசிய விருது வென்றார் அல்லு அர்ஜுன்
'புஷ்பா 2: தி ரூல்', சுகுமாரின் 2021 ஆம் ஆண்டு தெலுங்கு பிளாக்பஸ்டர் படமான'புஷ்பா: தி ரைஸின்' நேரடி தொடர்ச்சியாகும்.
முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக, புஷ்பா ராஜ் என்ற கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா நாயகியாக ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்திலும் நடித்தனர்.
ஃபஹத் ஃபாசில் முதல் பாகத்தின் முடிவில் தான் ஷெகாவத் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, வெளியாகவுள்ள இரண்டாம் பாகத்தில் மிகப் பெரிய பாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இப்படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். செம்மர கடத்தலின் பின்னணியில் அமைந்த இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல் பாகத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
ட்விட்டர் அஞ்சல்
புஷ்பா 2 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது
#Pushpa2TheRule in cinemas from December 6th, 2024. pic.twitter.com/BySX31G1tl
— Allu Arjun (@alluarjun) June 17, 2024