"16 வயதில் என்னை வீட்டு சிறையில் வைத்தார் என் அப்பா": பிரியங்கா சோப்ரா
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஆங்கில மொழி திரைப்படங்கள் மற்றும் வெப்-சீரிஸ்களில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் சிறுவயதில் எதிர்கொண்ட சுவாரசிய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதிலிருந்து: "நான் எனது பள்ளி இறுதி படிப்பிற்காக, அமெரிக்காவிலிருந்து, இந்தியாவிற்கு சென்றேன். அப்போது பள்ளியில் உடன்படிக்கும் யாரோ ஒரு நபர், என்னை பின்தொடர்ந்து வந்து, எங்கள் வீட்டு பால்காணியில் ஏறி குதித்தான்". அதுநாள் வரை, நான் சிறிது திமிர்பிடித்தவளாகவும், யாராலும் 'வெல்ல முடியாதவள்' என்ற எண்ணத்தோடு திரிந்ததாகவும், அன்றுதான் முதலில் பயந்ததாகவும் கூறினார்.
கட்டுப்பாடுகள் விதித்த ப்ரியங்காவின் அப்பா அஷோக் சோப்ரா
மர்ம நபர் ஒருவர் தன்னுடைய மகளின் பால்கனியில் குதித்ததை அறிந்த ப்ரியங்காவின் அப்பா, ப்ரியங்காவிற்கு கட்டுப்பாடு தேவை என்றும், அன்று முதல் அவரின் அறை கதவு, ஜன்னல் என் அனைத்தையும் கம்பி வைத்து அடைத்துவிட்டதாகவும் கூறினார். தன்னை கிட்டத்தட்ட ஜெயிலில் பாதுகாப்பாக வைத்ததாக பிரியங்கா கூறினார். பிரியங்கா 12 வயதில், அமெரிக்காவிற்கு சென்றதாகவும், பள்ளி படிப்பை அங்கே தொடர்ந்தாகவும், அதன் பின்னர் மீண்டும் இந்தியாவிற்கு வந்த போது தான், தான் அழகி போட்டியில் பங்குகொண்டதாகவும் அவர் கூறினார். அந்த மிஸ்.இந்தியா அழகி போட்டிக்கு தனக்கு தெரியாமலேயே தன்னுடைய பெயரை, தன்னுடைய பெற்றோர்கள் பதிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.