"நான் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்": பாலிவுட் நடிகை பிரியங்கா வருத்தம்
செய்தி முன்னோட்டம்
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் ரூஸ்ஸோ பிரதெர்ஸ் இயக்கும் 'சிட்டாடல்' என்ற வெப் சீரிஸின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த sci-fi திரில்லர் தொடரில், முன்னணி வேடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.
இது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரியங்கா சோப்ரா, "நான் செய்யும் எல்லாவற்றிலும் மக்கள் தவறைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். மக்கள் அதை கொஞ்சம் ரசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் அதிக சுதந்திர மனப்பான்மையுடன் இருந்தேன், ஆனால் இப்போது, நான் சற்று எச்சரிக்கையாக இருக்கிறேன், ஏனென்றால் என் குடும்பத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு செல்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக மக்கள் நீங்கள் வீழ்ச்சியடைய ஒரு காரணத்தைத் தேடுகிறார்கள்" எனக்கூறினார்.
card 2
RRR குறித்து தவறான தகவலை கூறிய பிரியங்கா சோப்ரா
சில மாதங்களுக்கு முன்னர், ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் பிரியங்கா சோப்ரா.
அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், ஹாலிவுட்டையும், தற்போது இருக்கு பாலிவுட்டையும் ஒப்பிட்டு பேசினார்.
தற்போது வெளிவரும் திரைப்படங்களின், நடனம், கதையம்சம் வியக்கவைக்கிறது என பாலிவுட் படங்களின் தரத்தை பற்றி அவர் பேசும் போது, RRR பற்றியும் கூறினார்.
உடனே பிரியங்கா சோப்ரா, "அது பாலிவுட் திரைப்படம் அல்ல, அது தமிழ் திரைப்படம். இது பெரிய, மெகா, பிளாக்பஸ்டர் தமிழ் (திரைப்படம்). இவை அனைத்தையும் உள்ளடக்கிய படம்... இது நம் அவெஞ்சர்ஸ் போன்றது" என்று அவரை 'திருத்தினார்'.
பிரியங்கா சோப்ராவிற்கு தமிழ் படம், தெலுங்கு படம் என்ற வித்தியாசம் கூட தெரியாமல் இப்படி பேசுகிறாரே என பலர் அவரை ட்ரோல் செய்தனர்.