
முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா
செய்தி முன்னோட்டம்
நடிகை பிரியங்கா சோப்ரா-அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸிற்கு பிறந்த மகளான மால்டி மேரியின் புகைப்படத்தை இதுநாள் வரையில் வெளியிடாமல் தவிர்த்து வந்தனர் இருவரும்.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 31) நிக்கும், அவரது சகோதரர்களும், 'ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்'-இல் விருது பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்ட நிக், தன்னுடைய மனைவியான பிரியங்கா, தனக்கு உறுதுணையாக இருப்பதை பற்றி பெருமையாக கூறினார். தொடர்ச்சியாக, தன்னுடைய மகளான 'மால்டி மேரி'க்கு தந்தையாக இருப்பதை பெருமையாக நினைப்பதாகவும், அவள் வளர்ந்ததும், அவளுடன் இதே மேடையில் மீண்டும் ஏற விழைவதாகவும் கூறினார்.
இந்த வீடியோவை, பிரியங்கா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். உடன், தன்னுடைய மகளுடன் அந்நிகழ்வில் கலந்து கொண்ட படங்களையும் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மகளின் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா
Priyanka Chopra and Nick Jonas’ daughter Malti just made her first public appearance! https://t.co/4K52pNqwQv pic.twitter.com/drkRPNAMC1
— People (@people) January 30, 2023