வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். கடந்த 2022 -ஆம் ஆண்டு, வாடகை தாயின் உதவியுடன் ஒரு பெண் குழந்தைக்கு, தான் தாயானதாக அறிவித்தார். எனினும், எதற்காக அந்த முடிவை எடுத்தார் என்பதை பற்றியோ, குழந்தையை பற்றியோ அவர் பேசியதே இல்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில், இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதிலிருந்து: பிரியங்கா சோப்ராவிற்கு மருத்துவ சிக்கல்கள் இருந்த காரணத்தினால் தான், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்ததாக தெரிவித்தார். பிரியங்கா- நிக் ஜோனாஸ் தம்பதியரின் குழந்தையான, மால்டி மேரி, குறை மாதத்தில் பிறந்தது என்றும், அக்குழந்தை பிறக்கும் போது, பிரியங்கா சோப்ராவும், ஆபரேஷன் ரூமில் இருந்ததாகவும் கூறினார்.
குழந்தை பாதுகாப்பில் அதீத கவனம்
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்பதால், 3 மாதங்கள், குழந்தை NICU -இல் இருந்தது எனவும், தினமும், தன்னுடைய மார் மீதும், தன் கணவரின் மார் மீதும் படுக்க வைக்கப்பட்டார் எனவும் கூறினார். பிரியங்கா சோப்ரா, வாடகை தாய் மிகவும் அன்பாகவும், கவனமாகவும் தன்னுடைய குழந்தையை, 6 மாதங்கள் பேணி காத்ததாகவும் கூறினார். அதோடு, இந்த வாடகை தாய் விவகாரத்தில், தன்னை நோக்கி வீசப்பட்ட எதிர்மறை விமர்சனக்காரர்களுக்கு, "என்னுடைய முடிவுகளுக்கு, காரணங்கள் கற்பிக்க யாருக்குமே உரிமை இல்லை" என கூறினார். அதோடு, தன்னுடைய குழந்தையின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகவும் கவனத்துடன் இருப்பதாகவும், அவர் தெரிவித்தார். அதனால்தான், மகளை பற்றி எந்த வித செய்தியோ, புகைப்படமோ வெளி உலகத்திற்கு கசியாமல் கவனமாக இருக்கிறாராம்.