பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள்
பச்சிளம் குழந்தைகளுக்கு, பிறந்ததும் சில சோதனைகள் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 'நியூ பார்ன் ஸ்க்ரீனிங்' என்று மருத்துவத்துறையில் குறிப்பிடப்படும் இந்த ஸ்க்ரீனிங்கில், 3 சோதனைகள் முக்கியம். அவை: இரத்தப் பரிசோதனைகள்: குழந்தையின் குதிகாலில் இருந்து எடுக்கப்படும் சில இரத்தத் துளிகளைப் பயன்படுத்தி, இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் அது ஆய்விற்கு உட்படுத்தப்படும். கேட்கும் திறன் சோதனை: இதில் இரு வகைகள் உண்டு. ஒன்று, குழந்தையின் காதில் ஒரு சிறிய இயர்பீஸ்/மைக்ரோபோனை வைத்து, இந்தப் பரிசோதனையை மேற்கொள்வார்கள். மற்றொன்று, குழந்தை தூங்கும் போது உச்சந்தலையில், மின்முனைகளை பொருத்தி எடுப்பது. CCHD திரை - இந்த சோதனையில், குழந்தையின் கை மற்றும் காலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்கு ஒரு ஆக்சிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது.
'ஸ்க்ரீனிங்' சோதனை செய்வதன் முக்கியத்துவம்
அதை, குழந்தையின் தோலில் பொருத்தப்படும், ஒரு சிறிய மென்மையான சென்சாரோடு இணைத்து, குழந்தைகளின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்கிறது. இந்த சோதனைகளை, குழந்தை பிறந்த 48-72 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும். இச்சோதனைகள், பிறந்த குழந்தையின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் மரபணு கோளாறுகளைக் கண்டறிய உதவுகிறது. ஆரம்பகால மரபணு கோளாறுகளை கண்டறிவதால், குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையை துவங்க முடிகிறது. அதோடு, அது சார்ந்த உடல்நல சிக்கல்களைத் தடுக்கவும் உதவுகிறது. மேலை நாடுகளில், இவ்வகை சோதனைகள் கட்டாயப்படுத்த பட்டுள்ளன. இருப்பினும், இந்தியாவில் இத்தகைய சோதனைகள் பற்றிய விழிப்புணர்வு, சற்று குறைவாகவே உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.