பெற்றோர்களே, உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் மொபைல் போன் கொடுக்கலாம்?
இந்த டிஜிட்டல் யுகத்தில், எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு டிஜிட்டல் சாதனத்தை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவற்றைப் பயன்படுத்துவதில் சில ஆரோக்கியமான எல்லைகளை வரையறுப்பதும் பெற்றோரின் பொறுப்பாகும். எந்த வயதில், அவர்கள் அதை உபயோகிப்பது பாதுகாப்பானது என்பது விவாத பொருளாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் பயன்பாட்டிற்கு மொபைல் போனை, எந்த வயதில் வாங்கித் தரலாம் என்பதை முடிவு செய்ய சில குறிப்புகள் இதோ: பட்ஜெட்: பெற்றோரின் நிதி நிலைமை முக்கிய காரணியாக அமைய வேண்டும். வாங்கித் தரும் பொருளை, குழந்தைகள் பத்திரமாக கையாள்வார்களா என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அது தவிர, விலையுயர்ந்த மொபைல்களை வாங்க வேண்டாம்.
வரையறுக்கபட வேண்டிய மொபைல் பயன்பாடு
உடல் நலன்: அதிக மொபைல் பயன்பாட்டினால், தலைவலி, மனச்சோர்வு மற்றும் பல மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடலாம் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். அவர்கள் மொபைலில் செலவிடும் நேரத்தை வரையறுக்க கற்று தரவேண்டும். ஆன்லைன் ஆபத்துகள்: ஆன்லைனில் நடைபெறும் மோசடிகள் மற்றும் குழந்தைகளை குறி வைத்து நடைபெறும் பாலிய வன்முறைகளை பற்றி எடுத்து கூற வேண்டும். அந்நியர்களுடன் உரையாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். சமூக மற்றும் பள்ளி வாழ்க்கைக்கு இடையூறு: அதீத மொபைல் பயன்பட்டால், பிள்ளைகள் தங்களின் சமூக வாழ்க்கையையும், பள்ளி படிப்பில் ஆர்வமின்மையும் அடைய வாய்ப்புள்ளது. அதையும் கவனத்தில் கொள்ளவும். சமூக ஊடக பயன்பாடுகளுக்கு அணுகல் இல்லாத செல்போனை, உங்கள் குழந்தைகளுக்கு வழங்குவது சிறந்த மாற்று வழி.