"குவான்டிகோ படப்பிடிப்பின் போது, கருமுட்டைகளை சேமித்து வைத்தேன்": பிரியங்கா சோப்ரா பேட்டி
செய்தி முன்னோட்டம்
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் பாப் பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான சில ஆண்டுகளுக்கு பிறகு, வாடகை தாய் மூலம் ஒரு பெண்குழந்தைக்கு தாயானார்.
பிரியங்கா சோப்ராவிற்கு மருத்துவ சிக்கல்கள் இருந்த காரணத்தினால் தான், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்ததாக தெரிவித்தார்.
குழந்தைக்கு 'மால்டி மேரி' என பெயரிட்டுள்ள அந்த தம்பதி, சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழாவிற்கும், வருகை தந்திருந்தனர்.
பிரியங்கா சோப்ரா தற்போது 'சிட்டாடெல்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரின் ப்ரோமோஷனின் போது, இந்த வாடகை தாய் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.
card 2
தாயின் அறிவுரைப்படி நடந்த பிரியங்கா
பிரியங்கா சோப்ராவின் பெற்றோர்கள் இருவரும் இந்திய ராணுவத்தில் மருத்துவர்களாக பணிபுரிந்தவர்கள்.
பிரியங்காவின் தாய், மது சோப்ரா, மகப்பேறு மருத்துவர் ஆவர்.
பிரியங்கா தனது 25 வயதில், திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை எனவும், தான் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது எனவும் தெரியாமல் இருந்ததாகவும் கூறினார். அப்போது, அவரின் தாய்தான், கருமுட்டைகளை சேமித்து வைக்கும் ஐடியாவை தந்ததாக பிரியங்கா கூறினார்.
இருப்பினும், கருமுட்டைகள் சேமிப்பு என்பது, அனைவரும் நினைப்பது போல, சுலபமான விஷயம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
2015-இல் வெளியான 'குவான்டிகோ' என்ற ஆங்கில படத்தின் ஷூட்டிங்கின் போதுதான், இந்த மருத்துவ ஆலோசனை நடைபெற்றது எனவும், இதற்காக தொடர்ச்சியாக ஒரு மாதம், தனக்கு ஊசி போடப்பட்டதெனவும் பிரியங்கா சோப்ரா தற்போது தெரிவித்துள்ளார் .