Page Loader
இவ்ளோ பெரிய பையனா?! விழா மேடையில் மகனை அறிமுகம் செய்த பிரபு தேவா!
மகன் ரிஷியுடன் பிரபுதேவா

இவ்ளோ பெரிய பையனா?! விழா மேடையில் மகனை அறிமுகம் செய்த பிரபு தேவா!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2025
06:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பெயர் பெற்ற நடன புயல் பிரபுதேவா, சமீபத்தில் சென்னையில் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். கடந்த வார இறுதியில் சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தனுஷ், வடிவேலு, இயக்குனர் ஷங்கர், SJ சூர்யா உள்ளிட்ட பலர் நேரில் வந்து கண்டு களித்தனர். பிரபு தேவா முதல்முறையாக நேரடியாக நடத்திய இந்த நடன நிகழ்ச்சியின் மேடையில் பல நட்சத்திரங்களும் தோன்றி ஆடினர். குறிப்பாக பிரபு தேவாவின் புகழ்பெற்ற 'பேட்ட ராப்' பாடலை அவரின் சாயலை ஒத்த ஒரு இளைஞன் ஆடி காண்போரை கவர செய்தான். தற்போது அந்த இளைஞன் தன்னுடைய மகன் ரிஷி ராகவேந்தர் தேவா என இன்ஸ்டாகிராமில் பிரபு தேவா பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post