Page Loader
திருமணத்திற்கு தயாராகிறாரா பிரபாஸ்?!; ரசிகர்களை குழப்பிய பிரபாஸின் இன்ஸ்டா பதிவு
கல்கி படத்தின் தயாரிப்பாளர்கள் அதன் முதல் பாடலை மிக விரைவில் வெளியிட உள்ளனர்

திருமணத்திற்கு தயாராகிறாரா பிரபாஸ்?!; ரசிகர்களை குழப்பிய பிரபாஸின் இன்ஸ்டா பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
May 17, 2024
02:39 pm

செய்தி முன்னோட்டம்

உலகெங்கிலும் பல கோடி ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், இன்று வெளியிட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டோரி அவரது ரசிகர்களை குழப்பமடைய செய்திள்ளது. "டார்லிங்ஸ்....இறுதியாக, மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவர் என் வாழ்க்கையில் நுழைய உள்ளார்... காத்திருங்கள்..."என்று ஒரு ஸ்டோரியை அவர் பதிவிட்டார். இந்தக் கதை அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் ஆதாரங்களின்படி, இது அவரது அடுத்த திரைப்பட வெளியீடான 'கல்கி 2898 AD' உடன் தொடர்புடையது. ஏனெனில் கல்கி படத்தின் தயாரிப்பாளர்கள் அதன் முதல் பாடலை மிக விரைவில் வெளியிடத் தயாராகி வருகின்றனர். கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'கல்கி 2898 AD', ஜூன் 27 அன்று திரைக்கு வருகிறது.

embed

பிரபாஸின் இன்ஸ்டா பதிவு

"Finally someone very special is about to enter our life...😊.. Just Wait!! " ~ #Prabhas Via Instagram! What are your thoughts?? pic.twitter.com/IeQ91YvWgH— Prabhas FC (@PrabhasRaju) May 17, 2024