LOADING...
பிரபாஸின் சலார் திரைப்படம், டிசம்பர் 22ல் வெளியாகிறது 
சலார் திரைப்படம் கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸின் சலார் திரைப்படம், டிசம்பர் 22ல் வெளியாகிறது 

எழுதியவர் Srinath r
Sep 29, 2023
03:27 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வருடம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி நடிகர் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நடிகர் ஷாருக்கானின் டங்கி(Dunki), திரைப்படத்துடன் மோதுகிறது. சலார் திரைப்படம் இந்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக படம் வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்படுவதாக என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பட தயாரிப்பு நிறுவனம் படம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சலார் திரைப்படத்தை, 'கேஜிஎஃப்' பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். நடிகர்கள் பிரபாஸ், சுருதிஹாசன், பிரித்விராஜ் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

சலார் திரைப்படம் கிறிஸ்துமஸிற்கு வெளியாகிறது