குளோபல் இன்வெஸ்ட்டர்ஸ் மீட்டில் கலந்து கொண்ட வில்லேஜ் குக்கிங் சேனல்; கூறியது என்ன?
தமிழ்நாட்டில் நேற்று துவங்கிய உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாட்டில் பல தனியார் நிறுவனங்கள் நேற்று கலந்து கொண்டனர். பல தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. இந்த சூழலில், ஒப்பந்தங்கள் தாண்டி, நிறுவனங்களுக்கிடையேயான கலந்துரையாடல் நிகழ்வுகளும் நடந்தன. இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று, பிரபல யூட்யூப் சேனலான வில்லேஜ் குக்கிங்-கும் கலந்து கொண்டுள்ளது. கிராமத்து சூழலில், இயற்கையான முறையில், சமையல் செய்யும் இந்த குழுவினரை, மற்றொரு சமையல் ஆப் 'குக்டி'-யின் நிறுவனர் ஆதித்யன் சில சுவாரசியமான கேள்விகள் கேட்டார்.
விளம்பரங்களையும், பிராண்ட்களையும் தவிர்த்தது ஏன்?
வில்லேஜ் குக்கிங் குழுவினரிடம், 'சில ஆயிரம் சப்ஸ்கரைபர்ஸ் இருக்கும் சேனல்கலே, தனியார் நிறுவனத்தின் பிராண்ட்களுக்கு விளம்பரம் செய்து காசு பார்ப்பார்கள். ஆனால் நீங்கள் யாருடனும் கூட்டணி சேரவிலையே? விளம்பரதாரர்களிடம் இருந்து உங்களுக்கு வழங்குவதாக கூறப்பட்ட அதிகபட்ச ஆஃபர் என்ன?' என கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நாங்கள் சேனல் தொடங்கியபோதே, இது போன்ற ப்ரோமோஷன் செய்யக்கூடாது என முடிவெடுத்தோம். யூட்யூப் மூலம் கிடைக்கும் வருமானம் போதும், அதை தாண்டி வேறு எங்கும் பணம் வாங்க கூடாது என்பது எங்கள் கொள்கை. அதனால் தான் 'விக்ரம்' படத்தில் நடித்ததற்கு நாங்கள் பணம் பெறவில்லை" என கூறினார்கள். வில்லேஜ் குக்கிங் தாண்டி, இர்பான், மதன் கௌரி, குக்'டி போன்ற பல யூட்யுபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
விளம்பரங்களை தவிர்த்த வில்லேஜ் குக்கிங் சேனல்
10 செகண்டுக்கு ரூ.4.5 லட்சம்.. இருந்தும் விளம்பரங்களை தவிர்த்தது ஏன்? - Village Cooking Channel#VillageCookingChannel | #TNGIM24 | #TNGIM2024Tamilnadu | #Chennai | #YouTuber | #YouTube | #VillageCooking pic.twitter.com/xgjEPQcazv— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 8, 2024