கங்கனா, ராதிகாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை பிஜேபியில் இணைந்துள்ளார்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி. இவரது கணவர் கணேஷுகரும் பிரபல நடிகராவார். இவர்கள் இருவரும் இன்று கோவையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து தமிழக பாஜக கட்சி அதிகாரபூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அளவில் பிரபல நடிகர் நடிகைகளை குறிவைத்து கட்சியில் சேர்த்து வரும் பாஜக, தமிழகத்திலும் அதே கொள்கையை பின்பற்றுவதாக தெரிகிறது. ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகை கங்கனா சமீபத்தில் பாஜவில் இணைந்து ஹிமாச்சலபிரதேசத்தில் தேர்தலில் நிற்கிறார். தமிழகத்தில் ராதிகா பாஜகவில் இணைந்தார். தற்போது ஆர்த்தியும் அதே வரிசையில் கட்சியில் இணைந்துள்ளார். இவர் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தப்படுவாரா என்பது குறித்த தகவல்கள் இல்லை.
நடிகை ஆர்த்தி, நடிகர் கணேஷ்கர் பாஜகவில் இணைந்தனர்
பிரபல தமிழ்த் திரையுலகக் கலைஞர், திருமதி.ஆர்த்தி கணேஷ் அவர்கள், பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமைப் பண்பாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, நமது மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள் முன்னிலையில், தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். திருமதி.ஆர்த்தி... pic.twitter.com/6TCxKs2chE— BJP Tamilnadu (@BJP4TamilNadu) April 9, 2024