Page Loader
தலைவர் 170: ஆகஸ்ட் 26 இல் பூஜை, செப்டம்பரில் துவங்கும் படப்பிடிப்பு
செப்டம்பரில் துவங்கும் தலைவர் 170 படப்பிடிப்பு

தலைவர் 170: ஆகஸ்ட் 26 இல் பூஜை, செப்டம்பரில் துவங்கும் படப்பிடிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 22, 2023
05:09 pm

செய்தி முன்னோட்டம்

'ஜெயிலர்' படத்தின் வெற்றியில் திளைத்து கொண்டிருக்கும் ரஜினியின் ரசிகர்களுக்கு மேலும் கூடுதல் கொண்டாட்டமாக அவரின் அடுத்த படத்தை பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 'தலைவர் 170' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள தனது அடுத்த படத்திற்கு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் உடன் இணைகிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கவிருப்பது, அனிருத். இப்படத்தை பற்றி வேறு எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை எனினும், இணையத்தில் அது பற்றி செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் 26 நடைபெறும் எனவும், அதன் பின்னர், செப்டம்பர் 19 தேதி முதல் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தலைவர் 170