மெட்ராஸில் கார்த்தி, ஜெர்மனில் சூர்யாவை இயக்கப்போகிறாரா பா.ரஞ்சித்?
இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்த போது, தன்னை ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் ஞானவேல் ராஜா அடுத்த படத்திற்காக மீண்டும் அணுகியுள்ளார் எனவும், அதற்காக ஒரு பெரிய நடிகரை ஞானவேல் ராஜா அழைத்து வர உறுதி தெரிவித்ததாகவும் கூறினார். இந்த சூழலில் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ரஞ்சித்திடம், இதை சார்ந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இன்னும் ஓரிரு வாரங்களில் இதற்கான பதில் அதிகாரபூர்வமாக கிடைக்கும் எனவும் அதுவரை பொறுமையாக இருக்குமாறும் ரஞ்சித் தெரிவித்தார்.
Twitter Post
ரஞ்சித் அடுத்து இயக்கப்போவது யாருடைய படம்?
கடந்த 2022ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவுடன் இணைந்து ரஞ்சித் ஜெர்மன் என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே, பட்ஜெட் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தை தான் தூசி தட்டி எடுக்கப்போவதாக செய்திகள் வெளிவருகின்றன. அப்படி ஒரு வேளை இது நிஜம் என்றால், ஏற்கனவே நடிகர் சூர்யா கைவசம் கங்குவா, வெற்றிமாறனின் வாடிவாசல் போன்ற படங்கள் உள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது ஜெர்மன் படமும் லேட்டஸ்டாக இணைந்துள்ளது. அதேபோல் பா.இரஞ்சித்தும் சார்பேட்டா பரம்பரை 2 படத்தை இயக்க உள்ளார். கைவசம் உள்ள படங்களை முடித்த பின்னர் சூர்யாவும், பா.இரஞ்சித்தும் இணைந்து ஜெர்மன் படத்தில் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.