ஆஸ்கார் விருதுகள் 2025: சிறந்த படத்திற்கான அளவுகோல்களில் மாற்றம் தரும் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
மார்ச் 2, 2025 அன்று நடைபெறவிருக்கும் 97வது ஆஸ்கார் விருதுகளுக்கான விதிகள் மற்றும் விளம்பர பிரச்சார விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளில் குறிப்பாக சிறந்த படங்களுக்கான தகுதி அளவுகோல்கள், சிறந்த அசல் இசைக்கான மாற்றங்கள் மற்றும் சிறப்பு விருதுகளுக்கான தகுதி ஆகியவை அடங்கும். இந்த மாற்றங்கள், கோவிட்-19 காலக்கட்டத்தில் டிரைவ்-இன் தியேட்டர்கள் பற்றிய விதிகளை ஆஸ்கார் விருதுக்கு தகுதிபெறும் இடங்களின் பட்டியலில் இருந்து தவிர்த்து, பாரம்பரிய சினிமாக்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆஸ்கார் விருதுக்கு பரிசீலிக்கப்பட, LA கவுண்டி, நியூயார்க் நகரம் , பே ஏரியா, சிகாகோ , அட்லாண்டா அல்லது டல்லாஸ் -ஃபோர்ட் வொர்த் ஆகிய இடங்களில் உள்ள திரையரங்கில் ஒரு வாரத்திற்கு போட்டியிடவுள்ள திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும்.
ஆஸ்கார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிகள்
ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்படும் திரைப்படங்கள் மேம்படுத்தப்பட்ட திரையரங்கு தரங்களை கடைபிடிக்க வேண்டும் மற்றும் சிறந்த படத்திற்கான அகாடமியின் பிரதிநிதித்துவம் மற்றும் உள்ளடக்கிய தரநிலைகளில் இருந்து நான்கு அளவுகோல்களில் குறைந்தது இரண்டையாவது பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கிடையில், அமெரிக்கா அல்லாத பிராந்திய வெளியீடுகள் தகுதிக்கு தேவையான, 10 சந்தைகளில் இரண்டில் கணக்கிடப்படும். சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் வகையிலும் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருந்த முந்தைய 15 தலைப்புகளில் இருந்து இப்போது 20 தலைப்புகள் இருக்கும். மேலும், ஒரு திரைப்படத்தின் இசையில் கணிசமான பங்களிப்பைச் செய்திருந்தால், மூன்று இசையமைப்பாளர்கள் வரை தனித்தனியாக ஆஸ்கார் விருதுகளுடன் அங்கீகரிக்கப்படலாம். இசையமைப்பாளர்கள் ஒரு குழுவாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற முந்தைய விதியிலிருந்து இது மாற்றப்பட்டுள்ளது.