பென்ஸ் திடைபடத்தின் 4-வது கட்டப் படப்பிடிப்பு; குழுவினருடன் இணைந்த நிவின் பாலி
செய்தி முன்னோட்டம்
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தின் 4-வது கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம், பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் பென்ஸ் திரைப்படத்தின் 4-வது கட்டப் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் எழுதி இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் வால்டர் என்ற எதிர்மறைக் கதாபாத்திரத்தில் தோன்றும் நிவின் பாலியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு படப்பிடிப்புத் தகவலை உறுதி செய்துள்ளது.
படப்பிடிப்பு தாமதம்
தாடி கெட்டப் பின்னணி
முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய நிவின் பாலி, பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நீண்டுகொண்டே செல்வது குறித்துச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இப்படத்தில் வால்டர் கதாபாத்திரத்திற்காகத் தாடி வைத்திருக்க ஒப்புக்கொண்டதால், படப்பிடிப்புத் தாமதத்தால் தொடர்ந்து சர்வம் மாயா, பிரதிச்சாயா, பெத்லகேம் குடும்ப யூனிட் எனத் தனது மற்ற அனைத்துப் படங்களிலும் தான் தாடியுடன் மட்டுமே நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நகைச்சுவையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்தச் சூழலில் தற்போது 4-வது கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
எல்சியூ யுனிவர்ஸ்
பென்ஸ் திரைப்படம்
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் நேரடியாக இயக்கவில்லை என்றாலும், இப்படம் அவரது பிரம்மாண்ட சினிமா பிரபஞ்சமான லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU) உடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய எல்சியூ படங்களில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வரவுள்ளதாக அண்மையில் நடிகை சம்யுக்தாவும் உறுதிப்படுத்தியிருந்தார்.
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க, கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவையும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.