ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுப் போட்டியில் கால்பதித்த 'ராமாயணா'; ஹாலிவுட் ஜாம்பவான்களுடன் நேரடிப் போட்டி
செய்தி முன்னோட்டம்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ராமாயணா' திரைப்படம், சர்வதேச திரைப்பட விருது பட்டியல்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 84-வது கோல்டன் குளோப் விருதுகளின் இரண்டு முதன்மை பிரிவுகளில் போட்டியிடுவதோடு, 99-வது ஆஸ்கர் விருதுகளின் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவிற்கான இறுதி 20 திரைப்படங்களின் பட்டியலிலும் இப்படம் தேர்வாகி இந்தியத் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது.
சவால்
கோல்டன் குளோப் விருதுப் போட்டி
சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் நிறுவனத்தின் கீழ் 84-வது கோல்டன் குளோப் விருதுகளுக்கு பட்டியலிடப்பட்டுள்ள 'ராமாயணா', சிறந்த திரைப்படம் -டிராமா மற்றும் சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் போட்டியிடுகிறது.
டிராமா பிரிவில் 88 திரைப்படங்களுடன் போட்டியிடும் இப்படம், கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி', ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் 'டிஸ்க்ளோஷர் டே', டெனிஸ் வில்லெனுவேவின் 'டூன்: பார்ட் த்ரீ' மற்றும் தகாஷி யமசாகியின் 'காட்ஜில்லா மைனஸ் ஜீரோ' ஆகிய உலகளாவிய படைப்புகளை எதிர்கொள்கிறது.
ஆஸ்கர்
99-வது ஆஸ்கர் விஷுவல் எஃபெக்ட்ஸ் முதல் 20 படங்களில் இடம்
மறுபுறம், 99-வது அகாடமி (ஆஸ்கர்) விருதுகளின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவிற்கான முதல் 20 திரைப்படங்களின் பட்டியலில் 'ராமாயணா' முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே', 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே', 'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்ட்', 'ஸ்டார் வார்ஸ்: தி மாண்டலோரியன் அண்ட் க்ரோகு' மற்றும் நெட்ஃபிக்ஸின் 'தி மஸ்கிட்டோ பவுல்' ஆகிய பிரம்மாண்ட ஹாலிவுட் படைப்புகளுடன் 'ராமாயணா' இடம்பிடித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 'டூன்' வரிசையின் மூன்றாம் பாகம், ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் இப்போட்டியில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விருது அங்கீகாரங்களுக்கு இணையாக, வசூல் ரீதியாகவும் 'ராமாயணா' உலகளவில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.