LOADING...
வெற்றிமாறன்- சிலம்பரசன் இணையும் படத்தில் நெல்சன் நடிக்கிறார்! இதுதான் கதையா?
வெற்றிமாறன்- சிலம்பரசன் இணையும் படத்தின் கதை வடசென்னையில் நடக்கிறதா?

வெற்றிமாறன்- சிலம்பரசன் இணையும் படத்தில் நெல்சன் நடிக்கிறார்! இதுதான் கதையா?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 16, 2025
07:11 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சிலம்பரசன் விரைவில் வெற்றிமாறன் உடன் இணையவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வெற்றிமாறன் அலுவலகத்திற்கு சிம்பு வருகை தரும் வீடியோ ஒன்று வைரலாக பகிரப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று ஊடகங்களில் வெளியான தகவலின் படி, சிம்பு- வெற்றிமாறன் படத்தில் நெல்சன் மற்றும் கவின் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர்களுடன் கூடிய ஒரு ப்ரோமோ ஷூட்டும் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இப்படத்தின் கதை பற்றிய ஊகங்களும் வெளியாகியுள்ளது.

கதை

கதைக்களம் வடசென்னையில் அமைந்துள்ளதாக தகவல்

2018ல் வெளியான வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான 'வட சென்னை' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், இதுவரை எந்த முன்னேற்றத்தும் தெரியவில்லை. அந்த படத்தில் இடம்பெற்ற அமீரின் கதாபாத்திரமான 'ராஜன்' என்ற கதாபாத்திரத்தின் இளமைக் காலத்தை மையமாகக் கொண்டு, வெற்றிமாறன் ப்ரிகுவல் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கு 'ராஜன் வகையறா' என்ற பெயரும் வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது வடசென்னையின் ப்ரீகுவலாக எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அந்த இளமைக்கால ராஜனாக சிம்பு நடிக்கிறார். 'ராஜன் வகையறா' படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பிற நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.