
69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும், இந்தியாவின் தலைசிறந்த படங்களும், அதில் பணிபுரிந்த கலைஞர்களுக்கும் தேசிய விருதுகள் தரப்படும்.
கடந்த ஆண்டின் தேசிய விருதுகளை 'சூரரை போற்று' திரைப்படம் அள்ளிய நிலையில், இந்தாண்டின் தேசிய விருதுகளை பெறப்போகும் படங்கள் பற்றிய அறிவிப்பு இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், AL விஜய் இயக்கிய 'தலைவி' படத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவாக நடித்தமைக்காக பாலிவுட் நடிகை கங்கண ரணாவத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'கங்குபாய்' படத்தில் நடித்ததற்காக அலியா பட்டின் பெயரும் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, 'RRR' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளராக கீரவாணி விருதை பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே உலக அரங்கில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தேசிய விருது
69th National film awards announcement today.. 📢#Karnan - #Jaibhim - #Sarpatta
— Laxmi Kanth (@iammoviebuff007) August 24, 2023
Who's gonna win the Best Actor/Best Film Among these..? Your Prediction..❓ pic.twitter.com/5n9o8uV7yb