ஸ்டார் வார்ஸ், ஹாரி பாட்டர் ஆகியவற்றிலிருந்து ஈர்க்கப்பட்டு தான் கல்கி 2898AD உருவானது: இயக்குனர் நாக் அஸ்வின்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி 500 கோடி வசூலை தாண்டி சாதனை புரிந்து வரும் 'கல்கி 2898AD' திரைப்படத்தின் கதை உருவாக்கத்தில் ஹாலிவுட் படங்களின் தாக்கம் பற்றி அவர் தற்போது மனம் திறந்துள்ளார்.
டைம்ஸ் நௌ வெளியிட்ட செய்தியின்படி, "நாங்கள் மார்வெல் படங்களை பார்த்து வளர்ந்த சந்ததியினர். அதனால் அயர்ன் மேனை விட, கார்டியன்ஸ் ஃஆப்தி கேலக்சி தான் என்னை அதிகமாக ஈர்த்தது எனக்கூறுவேன்" என்றார்.
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஜூன் 27 அன்று வெளியானது.
இப்படம், அறிவியல் புனைகதைகளுடன் புராணங்களின் இணைப்பாகும்.
கமலின் தோற்றம்
படத்தில் கமலஹாசனின் தோற்றம் எப்படி உருவானது?
மேலும் படத்தில் கமல்ஹாசனின் தோற்றம், ஹரி பாட்டர் படத்தின் வோல்டிமார்ட் கதாபாத்திரத்திரத்திலிருந்து உருவானதா என கேட்கப்பட்டதற்கு அஸ்வின், "எங்கள் குறிப்புகள்படி, இது பழைய திபெத்திய துறவிகள், அவர்கள் 120 முதல் 130 வயதுடையவர்கள், அவர்களை ஒத்து இருக்கவேண்டும் என நினைத்தோம். நாங்கள் விவாதம் செய்யும் போதெல்லாம் கமல் எப்போதும் டோரியன் கிரேவின் உருவப்படத்தைப் பற்றி குறிப்பிடுவார்." என்றார்.
எனினும் படத்தின் ஓரிரு கதாபாத்திரங்களின் பெயர்கள் ஸ்டார் வார்ஸ் மற்றும் ஹாரி பாட்டர் படங்களின் மூலம் ஈர்க்கப்பட்டு உருவானது தான் என ஒப்புக்கொண்டார்.