Page Loader
மோகன்லால் மகள் விஸ்மயா ஹீரோயினாக அறிமுகம்! ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் புதிய படம்
மோகன்லாலின் வாரிசு ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார்

மோகன்லால் மகள் விஸ்மயா ஹீரோயினாக அறிமுகம்! ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் புதிய படம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 02, 2025
05:45 pm

செய்தி முன்னோட்டம்

மலையாள சினிமாவில் மோகன்லாலின் வாரிசு ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். சிறந்த நடிகராகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் திகழும் மோகன்லாலின் மகள் விஸ்மயா, ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்தப் படம், ஆசிர்வாத் சினிமாஸின் 37வது தயாரிப்பாகும். கலைத் துறையில் ஆழமான பிணைப்பு கொண்ட விஸ்மயா, இதுவரை சினிமா வெளிச்சத்திலிருந்து விலகியே இருந்தார். எழுத்தும் ஓவியமும் இவரது முக்கிய விருப்பங்களில் ஒன்று. 2021ல் 'Grains of Stardust' என்ற கவிதைத் தொகுப்பை Penguin Random House வெளியிட்டு, அது அமேசானில் பெஸ்ட் செல்லராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாரிசு 

ஏற்கனவே மகன் பிரணவ் கதாநாயகனாக அறிமுகம்

விஸ்மயாவின் சகோதரர் பிரணவ் மோகன்லால் 2018ல் 'ஆதி' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஜீத்து ஜோசப் இயக்கிய அதிரடித் திரைப்படம் வசூலிலும் விமர்சனங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தேர்வு செய்து படங்களை நடித்து வரும் பிரணவ் தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்குபவர். அவரை போலவே விஸ்மயாவும் தற்காப்பு கலையில் பயிற்சி பெற்றவர். மொய் தாய் எனப்படும் தாய்லாந்து தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றுள்ள விஸ்மயா, சமூகவலைத்தளங்களில் தனது பயிற்சி வீடியோக்களையும் பகிர்ந்து வந்துள்ளார். இதனையடுத்து தற்போது அவர் ஒரு முழுமையான கலைஞராக கதாநாயகி அவதாரத்தில் களமிறங்குகிறார்.