தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை
செய்தி முன்னோட்டம்
மலையாளத்தில் சில தினங்களுக்கு முன்னர் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்ற திரைப்படம், சக்கைபோடு போடுகிறது.
படம் மொழிமாற்றம் செய்யப்படவில்லை, ரீமேக் செய்யப்படவில்லை என்றாலும், இந்த திரைப்படம் பல கோடிகளை ஈட்டி வருகிறது.
தமிழ் திரைநட்சத்திரங்கள் பலரும், மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றனர்.
அதற்கு காரணம், படத்தின் கதை, திரைக்கதை தாண்டி, தமிழ் மக்கள் அந்த படத்தை எளிதாக கனெக்ட் செய்யக்கூடியதாக இருப்பது தான் முக்கிய காரணம்.
அந்த வகையில், சமீப காலங்களில் மலையாளத்தில் வெளியாகி, தமிழ்நாட்டிலும் சூப்பர்டூப்பர் ஹிட் ஆன சில படத்தின் தொகுப்புகளை இங்கே பார்க்கலாம்.
மலையாள திரைப்படங்கள்
தமிழ்நாட்டில் வெற்றி அடைந்த மலையாள திரைப்படங்கள்
ப்ரேமம்: நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் நடித்திருந்த இந்த படம், கதையின் நாயகன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அழகிய காதலை பேசுகிறது.
நேரம்:இதுவும் நிவின் பாலியின் திரைப்படம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நஸ்ரியா, பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்.
ஹ்ரிதயம்:பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருந்த இத்திரைப்படத்தின் கதைக்களம் சென்னை என்பதால், இப்படம் தமிழ் ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானது.
ஐயப்பனும் கோஷியும்: இந்த திரைப்படம் கொரோனா காலத்தில் வெளிவந்தாலும், திரையரங்கம் மற்றும் ஓடிடி இரண்டிலும் இப்படம் பெருத்த வரவேற்பை பெற்றது.
உஸ்தாத் ஹோட்டல்: துல்கர் சல்மான் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த திரைப்படம், இன்றளவும் மிகவும் பிரபலம்