'சச்சின்' படத்தின் ரீ-ரிலீஸ் ட்ரெயிலர் வெளியானது!
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய், ஜெனிலியா நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஏப்ரல் 14 2005 அன்று வெளியான திரைப்படம் 'சச்சின்'.
ஜான் மஹேந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம், தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
வரும் ஏப்ரல் 18 இந்த படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட்.
இப்படத்தில் மேலும், வடிவேலு, சந்தானம், ரகுவரன், பிபாஷா பாசு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
அழகிய கல்லூரி காதல் கதை பற்றி பேசும் இந்த படம் அதன் ஒளிப்பதிவிற்க்காகவும் அதிகம் பாராட்டப்பட்டது.
மறைந்த இயக்குனர் ஜீவா தான் இப்படத்தின் கேமரா மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தயாரித்தது கலைப்புலி எஸ்.தாணு.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#CinemaBytes | 'சச்சின்' படத்தின் ரீ-ரிலீஸ் ட்ரெயிலர் வெளியானது!#SunNews | #SacheinRerelease | @actorvijay | @ThisIsDSP | @geneliad | @iamsanthanam pic.twitter.com/SWvFvfgLLW
— Sun News (@sunnewstamil) April 14, 2025