
மாதவன்- ஜோதிகா நடித்துள்ள ஷைத்தான் பட ட்ரைலர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிக்கும் நேரடி திரைப்படம் தான் ஷைத்தான்.
இப்படத்தில், அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மார்ச் 8, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.
திரில்லர் படப்பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், மாதவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜியோ ஸ்டுடியோஸ், தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் ஷைத்தான் அஜய் தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ளார்.
முன்னதாக படத்தின் டீஸர்-ஏ எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், ட்ரைலர் வெளியான சில மணி நேரத்திலேயே பல ஆயிரம் வியூஸ்களை கடந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஷைத்தான் பட ட்ரைலர்
Knew it...that will Love it ! 💥💥❤️🔥❤️🔥
— Girish Johar (@girishjohar) February 22, 2024
Hell comes home with #Shaitaan
💀🌟🤩💫🌈#ShaitaanTrailer
Taking over cinemas on 8th March 2024.@ajaydevgn @ActorMadhavan #Jyotika @imjankibodiwala #JyotiDeshpande @KumarMangat @AbhishekPathakk #VikasBahl #JioStudios @ADFFilms… pic.twitter.com/DcM7l5xJ8r