
வேட்டையன் பராக் பராக்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் புதிய அப்டேட்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் வேட்டையன் படத்தின் அப்டேட் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய் பீம் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில், படத்தில் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
லைக்கா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படத்தை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் குறித்த புதிய அப்டேட் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியாகும் என லைக்கா அறிவித்துள்ளது.
படத்தின் டீசர் அல்லது முதல் பாடல் குறித்த அறிவிப்பு இதில் வெளியாகலாம் என எதிர்பார்ப்பிக்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
லைக்காவின் எக்ஸ் பதிவு
#Vettaiyan 🎯 🦅 🕶️
— Lyca Productions (@LycaProductions) August 18, 2024
Tomorrow 10 AM 🕙#வேட்டையன் 🕶️ pic.twitter.com/kopEJrmY76