Page Loader
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அயலக திரையரங்க உரிமையை கைப்பற்றியது லைகா நிறுவனம்
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய கதைக்களத்தை கொண்டது என கூறப்படுகிறது

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அயலக திரையரங்க உரிமையை கைப்பற்றியது லைகா நிறுவனம்

எழுதியவர் Srinath r
Sep 26, 2023
12:54 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷின் நடிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படம், டிசம்பர் 15ல் வெளியாகிறது. தற்போது இத்திரைப்படத்தின் அயலக திரையரங்க உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுதந்திரத்திற்கு முந்தைய கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு பின் மீண்டும் தனுஷ் அருண் மாதேஸ்வரனுடன் இணையவுள்ளார். அத்திரைப்படத்தை தனுஷின் வண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

அயலக திரையரங்க உரிமையை கைப்பற்றியது குறித்து லைகாவின் ட்விட்