
தலைவர் 171 திரைப்படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?
செய்தி முன்னோட்டம்
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன், தலைவர் 171 திரைப்படத்திற்காக இணைகிறார்.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மிகப்பெரிய ரஜினி ரசிகரான சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பை நலவ விடமாட்டார் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நீண்ட காலமாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டுமென, விரும்பும் ரஜினியின் மருமகனான தனுஷுக்கு கிடைக்காத வாய்ப்பு, சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கலாமென சொல்லப்படுகிறது.
நடிகர் தனுஷ் தன் மாமாவான ரஜினிகாந்த் உடன், ஒரு காட்சியிலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
2nd card
ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் விரும்பும் தனுஷ்
மிகப்பெரிய ரஜினி ரசிகரான தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்துவிட்டாலும், தற்போதும் ரஜினி படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்து விடுவாராம்.
தலைவர் 170 திரைப்படத்தில் தனுசுக்கு வாய்ப்பு கிடைக்கும் என பேசப்பட்டது. ஆனால் அது நிறைவேறாமல் போன நிலையில், தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினியுடன் இணையும் வாய்ப்பை சிவகார்த்திகேயன் பெறலாம் என கூறப்படுகிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தை, வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தனுஷ் தயாரித்த நிலையில், அப்போதும் ரஜினியுடன் இணையும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேமியோக்களை எடுப்பதில் பெயர் போன லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தில் தனுஷை, கேமியோ ரோலில் நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.