Page Loader
இன்று டிவியில் ஒளிபரப்பாகும் சிறப்பு படங்கள் இவைதான்!
சின்னத்திரையில் பல புது படங்கள் இரண்டு நாட்களுக்கு ஒளிபரப்படுகிறது

இன்று டிவியில் ஒளிபரப்பாகும் சிறப்பு படங்கள் இவைதான்!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 14, 2025
10:35 am

செய்தி முன்னோட்டம்

இன்று தை பிறக்கிறது! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரது வீட்டில் இன்று புதுப்பானையில் பொங்கல் பொங்கி, சூரியனை வணங்கி தங்கள் நாளை தொடங்கி இருப்பார்கள். இந்த நாளை மேலும் சிறப்பிக்க சின்னத்திரையில் பல புது படங்கள் இரண்டு நாட்களுக்கு ஒளிபரப்படுகிறது. பல முன்னணி தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்படும் படங்களும் அவற்றின் நேரங்களும் உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம். அவற்றை பார்த்து உங்களுக்கு விருப்பமான படத்தை தேர்வு செய்து கண்டு களியுங்கள்!

சின்னத்திரை

டிவியில் இரண்டு நாட்களுக்கு ஒளிபரப்பாகும் சிறப்பு படங்கள்

சன் டிவி இன்று: 11.00 AM: *நம்ம வீட்டுப் பிள்ளை* 2.30 PM: *திருச்சிற்றம்பலம்* 6.30 PM: *வேட்டையன்* நாளை: 11.00 AM: *பிளெடி பெக்கர்* 2.30 PM: *சண்ட கோழி 2* 6.00 PM: பீஸ்ட் விஜய் டிவி இன்று : 12.30 PM: *வாழை* 5.30 PM: *அமரன்* நாளை: 11.00 AM: *அரண்மனை 4* 3.00 PM: *மஞ்சும்மள் பாய்ஸ்* 6.00 PM: மெய்யழகன் கலைஞர் டிவி இன்று: 10.00 AM: *டான்* 1.30 PM: *இந்தியன் 2* 6.00 PM: *துணிவு* நாளை: - 10.00 AM: *கருடன்* 1.30 PM: *லவ் டுடே* 6.00 PM: *விடுதலை பாகம் 1* 9.30 PM: *அகிலன்*