Page Loader
90'களின் எவர்க்ரீன் ட்ரீம் கேர்ள் சிம்ரனின் பிறந்தநாள் இன்று!
சிம்ரன், தனது 50வது படமாக, தமிழில் சப்தம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

90'களின் எவர்க்ரீன் ட்ரீம் கேர்ள் சிம்ரனின் பிறந்தநாள் இன்று!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 04, 2023
09:04 am

செய்தி முன்னோட்டம்

நடிகை சிம்ரன் என்று சொன்னாலே, அவரின் நடிப்பும், நடனமும் கண்முன்னே வந்து நிக்கும்! அப்படி தன்னுடைய நடன அசைவுகளால், ரசிகர்களை இன்றும் கட்டி போட்டு வைத்திருப்பவர் சிம்ரன். பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த சிம்ரன், நடனத்தின் மேல் கொண்ட ஆசையால், சிறு வயதிலேயே நடனம் கற்று கொண்டார். அதன் பின்னர், சின்னத்திரையில், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அவரை கண்ட நடிகை ஜெயா பச்சன், தனது ஹிந்தி படம் ஒன்றில், சிம்ரனை அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே தனது நடனத்திற்கு பாராட்டை பெற்றார். அதன் பின்னர், மலையாளம், கன்னடம் என ஓரிரு படங்களில் நடித்து கொண்டிருந்த போதுதான், VIP படத்தில் நடிப்பின் ஜாம்பவான் சிவாஜி கணேசன் மற்றும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிம்ரன்

என்றென்றும் சிம்ரன்!

சிம்ரனின் படங்கள் தோல்வி கண்டாலும், அவரின் நடனத்தை குறை சொல்வார் யாரும் இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய திரையுலகையே ஆட்சி செய்தார் எனலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்திக்க நேர்ந்த போது, தன்னுடைய சிறுவயது நண்பரான, தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். 'சந்திரமுகி' திரைப்படத்தில் முதலில் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டியது சிம்ரன் தான். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்ததால், நடிக்க இயலாது என வாய்ப்பை ஒதுக்கி விட்டார். எனினும், 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், அந்த மனவருத்தத்தை போக்கி கொண்டார். 90'களின் காலகட்டத்தில் இருந்த அனைத்து நடிகர்களுடனும் நடித்த ஒரே நடிகை சிம்ரன் மட்டும் தான்