Page Loader
இரு பாகங்களாக உருவாகிறதா லியோ? இணையத்தில் பரவிய சூப்பர் நியூஸ்
இரு பாகங்களாக உருவாகிறதா லியோ?

இரு பாகங்களாக உருவாகிறதா லியோ? இணையத்தில் பரவிய சூப்பர் நியூஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 08, 2023
05:42 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான 'லியோ' இன்னும் இரண்டு மாதங்களில் திரைக்கு வரவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் இணையும் இரண்டாவது படமான இந்த திரைப்படம், LCU-வில் இணையுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. கைதி, மாஸ்டர், விக்ரம் வரிசையில் லியோ இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், லியோ திரைப்படத்தில், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில், தற்போது ஒரு சுவாரசியமான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி, லியோ இரண்டு பாகமாக வெளியாகும் என்றும், தலைவர்-171 , கைதி-2 ஆகியவற்றை தொடர்ந்து லியோ-2 வெளியாகுமென கூறப்படுகிறது

ட்விட்டர் அஞ்சல்

லியோ-2?