
எதிர்ப்புக்கு பணிந்தது லியோ படக்குழு- ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ஆபாச வார்த்தையை மியூட் செய்தது
செய்தி முன்னோட்டம்
பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து வந்த எதிர்ப்புகளால் லியோ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த ஆபாச வார்த்தையை படக்குழு மியூட் செய்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் 5ஆம் தேதி, லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இருந்தபோதும் அந்த ட்ரெய்லரில் நடிகர் விஜய் பேசியிருந்த ஆபாச வார்த்தை சர்ச்சைக்கு உள்ளானது. பல்வேறு தரப்பினரும் அந்த வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
லோகேஷ் கனகராஜ், அந்த வார்த்தையை அவர்தான் வற்புறுத்தி விஜயை பேச சொன்னதாகவும் கூறியிருந்தார்.
தற்போது படக்குழு, அந்த ஆபாச வார்த்தையை ட்ரைலரில் மியூட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
லியோ ட்ரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தை சர்ச்சையை கிளப்பியது
Team #Leo has muted the cuss word in the trailer on YouTube.. https://t.co/K7RbBMyERa https://t.co/UzoCyH1TTr
— Ramesh Bala (@rameshlaus) October 11, 2023