Page Loader
ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய 'லெஜெண்ட்' சரவணன்; வைரலாகும் வீடியோ 
ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய 'லெஜெண்ட்' சரவணன்

ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய 'லெஜெண்ட்' சரவணன்; வைரலாகும் வீடியோ 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 25, 2023
08:38 am

செய்தி முன்னோட்டம்

சரவணா ஸ்டோர்ஸ்-இன் அதிபரும், நடிகருமான 'லெஜெண்ட்' சரவணன் என்கிற சரவண அருள், சென்ற ஆண்டு கோலிவுட்டில் நடிகராக அறிமுகமானார். 54 வயதான சரவண அருள், அதற்கு முன்னர், தன்னுடைய கடையின் விளம்பர படங்களில் நடித்திருந்தார். அந்த விளம்பர படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். 'லெஜெண்ட்' என பெயரிடப்பட்ட அந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து அவர் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில், நேற்று விஜயதசமி நாளை முன்னிட்டு, லெஜெண்ட் சரவணன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் ஆட்டோ ஓட்டுநர்களுடன், திநகர் தெருவை வலம் வருவது போல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

விஜயதசமியை கொண்டாடிய லெஜெண்ட் சரவணன்