
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷின் குபேரா படக்குழு
செய்தி முன்னோட்டம்
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் குபேரா படத்தை தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார்.
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா இதில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
மேலும், அதற்கு அடுத்தபடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனாவின் கதாப்பாத்திரம் குறித்த வீடியோ அறிமுகம் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை (செப்டம்பர் 7) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு, தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருக்கும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
குபேரா படக்குழுவின் எக்ஸ் பதிவு
Wishing everyone a joyous Vinayaka Chavithi from the #SekharKammulasKubera team! ✨🤗
— Kubera Movie (@KuberaTheMovie) September 7, 2024
Get ready to witness the ultimate powerhouse duo— @dhanushkraja sir’s fierce energy and king @iamnagarjuna garu commanding presence. 😎😍@iamRashmika @sekharkammula @jimSarbh @Daliptahil… pic.twitter.com/VzU4uhH1rq