சினிமா டு அரசியல்: தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்கு தாவிய பிரபலங்கள் யார்?
இன்று விஜய் தனது அரசியல் நுழைவை பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என தனது கட்சியின் பெயரையும் அவர் அறிவித்தார். தனது கைவசம் உள்ள திரைப்படங்களை முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வரிசையில் தமிழ் சினிமாவிலிருந்து, அரசியலுக்குள் நுழைந்த திரைபிரபலங்கள் சிலரை பற்றி ஒரு ரீ-வைண்ட்: அண்ணாதுரை: திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவரான அண்ணாதுரை, சினிமாவில் கதாசிரியராக இருந்தார். கருணாநிதி: இவரின் ஆரம்பப்படியே சினிமா தான். கதை, திரைக்கதை, வசனம் என திரைக்கு பின்னால் பணியாற்றிய இவர், அண்ணாவின் வழியில், தன்னையும் திமுகவில் இணைத்து கொண்டார். எம்ஜிஆர்: '50, '60 களின் ஹீரோ- அதிமுகவின் நிறுவனராக மாறினார்.
அரசியலில் எண்ட்ரியான ஹீரோக்கள்
SSR: பிரபல குணசித்ர நடிகரான SS ராஜேந்திரன், அரசியலில் சில காலம் இருந்துவிட்டு, பின்னர் ஒதுங்கிவிட்டார் சிவாஜி கணேசன்: காங்கிரஸ்-இல் இணைத்து கொண்ட சிவாஜி, பின்னர் முழுமையாக அரசியலில் இருந்து விலகிவிட்டார் ஜெயலலிதா: எம்ஜிஆர் மூலம் அரசியலுக்கு வந்தவர், நீண்டகாலம் தமிழக முதல்வராக ஆட்சியில் இருந்தார். T ராஜேந்தர்: இவர் சினிமாவை போலவே, அரசியலிலும் தனிப்பாதையை தேர்வு செய்து செயல்பட்டு வருகிறார். சரத்குமார்: இவர் சமத்துவ மக்கள் கட்சியை தோற்றுவித்து, அதன் சார்பில் மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். சீமான்: நாம் தமிழர் கட்சியின் தலைவர் இவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு கமல்ஹாசன்: மக்கள் நீதி மையத்தை தோற்றுவித்து இரண்டு தேர்தல்களை சந்தித்தாகிவிட்டது
அரசியலில் எண்ட்ரியான ஹீரோக்கள்
விஜயகாந்த்: அதிமுக, திமுகவிற்கு மாற்றாக மிகப்பெரும் சக்தியாக உருவானார். தேமுதிக சந்தித்த முதல் தேர்தலிலேயே அமோக வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார். ரஜினிகாந்த்: சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலில் இறங்குவதாக அறிவித்தார். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்கதாக காரணத்தால் ஒதுங்குவதாக அறிவித்துவிட்டார். கார்த்திக்: இவர் பார்வர்ட் பிளாக் என்ற கட்சியை துவங்கி ஓரிரு தேர்தல்களை சந்தித்தார். இருப்பினும் சரியான வழிநடத்துதல் இல்லாத காரணத்தால், கட்சி காணாமல் போய்விட்டது. உதயநிதி: தாத்தா, தந்தை வழியில் இவரும் சினிமாவில் நுழைந்து, அரசியலில் கால் பதித்துவிட்டார். தற்போது அமைச்சராகவும் உள்ளார். இவர்களை தவிர, தேர்தலில் நிற்காமல், இருப்பினும் தாங்கள் சார்ந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளராக வளம் வந்தவர்கள்: வடிவேலு, ராதாரவி, வாகை சந்திரசேகர், செந்தில் என பலரும் உள்ளனர்.
அரசியலில் எண்ட்ரியான ஹீரோயின்ஸ்
ரோஜா: '90களின் டாப் ஹீரோயினாக இருந்தவர் ரோஜா. இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி, தற்போது ஆந்திராவின் அமைச்சராக உள்ளார். கௌதமி: கமலிடம் இருந்த பிரிந்த பிறகு, பாஜகவில் இணைத்து கொண்ட கௌதமி, சில மாதங்களுக்கு முன்னால் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெயப்பிரதா: இவரும் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். குஷ்பூ: திமுக, காங்கிரஸ் தற்போது பாஜக என அணிகள் மாறினாலும், நடிகை குஷ்பூ தீவிரமான அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். நமீதா: தமிழக பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் இவர். காயத்ரி ரகுராம்: ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம், தற்போது அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்