Page Loader
CSK-RR மேட்சை காண சேப்பாக்கத்தில் குவிந்த கோலிவுட் நட்சத்திர பட்டாளம்
நடிகர் ஜெயராம், மேகா ஆகாஷ், உள்ளிட்டோரும் இந்த மேட்சை காண வந்திருந்தனர்

CSK-RR மேட்சை காண சேப்பாக்கத்தில் குவிந்த கோலிவுட் நட்சத்திர பட்டாளம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 13, 2023
12:26 pm

செய்தி முன்னோட்டம்

கிரிக்கெட்டில், இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. இந்த மேட்ச், நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. CSK அணியை பல பிரபலங்கள் ஆதரித்து வரும் நிலையில், சென்னையிலே அந்த மேட்ச் நடைபெற்றால் சும்மா இருப்பார்களா என்ன? இந்த குறிப்பிட்ட மேட்சை காண, திரையுலகில் பலரும் வந்திருந்தனர். 'தல' தோனியின் தரிசனத்தை காணவும், சென்னை அணியை ஆதரிக்கவும், நட்சத்திர பட்டாளம் குவிந்திருந்தது. திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியின் MLAவும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகர் சதிஷ், நடிகை திரிஷா, பிந்து மாதவி என பலரும் வந்திருந்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் சதிஷ், த்ரிஷாவுடன் 

ட்விட்டர் அஞ்சல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் 

ட்விட்டர் அஞ்சல்

நண்பர்களுடன் மேட்சை காண வந்த திரிஷா 

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் ஹரிஷ் கல்யாண், தனது LGM குழுவுடன்