
தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகிறது
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
ஓரிரு குறும்படங்களை அவர் தயாரித்தும் உள்ளார். தற்போது திரைப்படங்களை தயாரிக்கும் பணியை கையில் எடுத்துள்ளார்.
முதல் படமாக, தமிழ் மொழியை தேர்ந்தெடுத்துள்ளார்.
இவை அனைத்தும் மக்கள் அறிந்ததே. Lets Get Married என பெயரிடப்பட்ட அந்த திரைப்படத்தின் நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். ஹீரோயினாக இவானா நடிக்கிறார். முக்கிய வேடத்தில், நதியா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார். இந்த படத்துக்கான மூலக்கதை தோனியின் மனைவி சாக்ஷியினுடையது எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதை தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
LGM படத்தின் போஸ்டர்
First look of #LGM is here!
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) April 10, 2023
Get ready to be bowled over by this fun filled family entertainer! pic.twitter.com/JtCRXZvh45