வெறும் ரூ.99 ரூபாய்க்கு மூவி டிக்கெட்-ஆ? எப்படி கிடைக்கும்?
செப்டம்பர் 20 அன்று, தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரூ.99க்கு திரைப்படங்களை கண்டு கொண்டாடலாம். மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா இந்த சலுகையை அறிவித்துள்ளது. இதில் 4,000 திரையரங்குகள் பங்கேற்கின்றன. சினிமா ரசிகர்களுக்கான இது மகிழ்ச்சியான செய்தி. செப்டம்பர் 20-ல், உங்கள் விருப்பமான திரைப்படங்களை குறைந்த விலையில் பார்க்கலாம். இந்த சலுகை, சினிமா ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. கடந்த ஆண்டு, தேசிய சினிமா தினம் அக்டோபர் 13 அன்று கொண்டாடப்பட்டது, ஆனால் இந்த முறை இது செப்டம்பர் 20-ல் கொண்டாடப்படுகிறது.
எந்த படங்களை காணலாம்?
ஒரே ஒரு நாள் மட்டும் இருக்கும் இந்தச் சலுகை வழக்கமான திரைப்படத் திரையிடல்களுக்கு மட்டுமே பொருந்தும். 3D, சாய்வு இருக்கைகள் மற்றும் பிரீமியம் திரையரங்குகள் இந்த ரூ.99 சலுகைக்கு உட்படவில்லை. இருப்பினும், பல திரைப்படங்களை குறைந்த விலையில் பார்க்க வாய்ப்பு உண்டு. தற்போது ஸ்த்ரீ 2, தும்பாட், கோட் மற்றும் தி பக்கிங்ஹாம் மர்டர்ஸ் போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை நீங்கள் இந்த சலுகையில் காணலாம்.
Twitter Post
எப்படி டிக்கெட்டுகளை வாங்குவது?
இந்த சலுகையில் உங்கள் ரூ.99 டிக்கெட்டை முன்பதிவு செய்வது எளிது; BookMyShow, Paytm போன்ற இணையதளங்கள் அல்லது PVR, INOX மற்றும் Cinepolis போன்ற திரையரங்குகளின் அதிகாரப்பூர்வ வெப்சைட்களில் சென்று, உங்களின் விருப்பத்திற்கேற்ப நேரம் மற்றும் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, முன்பதிவு செய்யுங்கள். அல்லது, உங்கள் அருகிலுள்ள தியேட்டருக்குச் சென்று டிக்கெட்டுகளை வாங்கலாம். உங்கள் விருப்பன திரைப்படத்தை ரூ.99க்கு காணும் இந்த சூப்பர் வாய்ப்பை தவற விடாதீர்கள்!