Page Loader
வெளியானது கமல்ஹாசனின் KH 237 திரைப்படத்தின் அறிவிப்பு
தக் லைப் திரைப்படத்தின் பூஜையின் போது, கமலும், அன்பரிவ் மாஸ்டர்களும்

வெளியானது கமல்ஹாசனின் KH 237 திரைப்படத்தின் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 12, 2024
06:41 pm

செய்தி முன்னோட்டம்

கமல்ஹாசன் தொடர்ச்சியாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். தற்போது இந்தியன்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்ததாக கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ஹச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். அதற்கு அடுத்ததாக சுமார் 36 ஆண்டுகள் கழித்து இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து 'தக் லைஃப்' என்ற படத்தில் நடிக்கிறார் கமல். இந்த படத்தில், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, கௌதம் கார்த்திக் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இந்த சூழலில் அடுத்த படத்தின் அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் 237வது படமாக அமையவுள்ள இந்த திரைப்படத்தினை இயக்கவிருப்பது பிரபல இரட்டையர் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பரிவ் தான். இந்த படத்தை கமலே தயாரிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

KH 237