Loading...
ரவி மோகன் இயக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் கெனிஷா; வைரலாகும் அறிவிப்பு
'அன் ஆர்டினரி மேன்' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் கெனிஷா

ரவி மோகன் இயக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் கெனிஷா; வைரலாகும் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 07, 2026
05:43 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல பாடகி கெனிஷா, 'அன் ஆர்டினரி மேன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளார். முன்னணி நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தை, அவரே தனது 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். கெனிஷாவின் இசையமைப்பாளர் அறிமுக அறிவிப்போடு, இப்படத்தின் சிங்கிள் பாடல் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பாடகர் ரஞ்சித் மற்றும் சிங்கப்பூர் தமிழ் ராப் பாடகர் யங் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர். மும்பையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ராப் கலைஞர் 50 சென்ட் அவர்களின் தொடக்கக் கலைஞராகவும், ஸ்னூப் டாக்கின் 'குவாலிஃபைட்' பாடல் வரிசையிலும் இடம்பெற்று யங் ராஜா சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி

யோகி பாபு - ரவி மோகன் கூட்டணி

இத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கோமாளி (2016), சைரன் (2024), மற்றும் காதலிக்க நேரமில்லை (2025) ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, யோகி பாபு மற்றும் ரவி மோகன் இணையும் மற்றொரு முக்கியத் திரைப்படமாக இது அமைந்துள்ளது.

இப்படத்தின் டிஜிட்டல் திரையிடல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

இயக்குநராக அறிமுகமாகும் 'அன் ஆர்டினரி மேன்' தவிர, ரவி மோகன் 'ப்ரோ கிளப்' என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துத் தயாரிக்கவுள்ளார்.

இதில் எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், 'டாடா' பட புகழ் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகும் 'கராத்தே பாபு' திரைப்படத்திலும் அவர் நடிக்கிறார்.

ADVERTISEMENT