'கனவு திருமணத்தில், நமது கனவு நாயகன்': கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நடிகர் விஜய்
சமீபத்தில் கோவாவில் திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற ஆண்டனி தட்டில் உடனான தனது திருமணத்தின் புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பாக - புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதிக்கும் இரண்டு படங்களிலும் தளபதி விஜய் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், "எங்கள் கனவு திருமணத்தில் எங்கள் கனவு நாயகன் எங்களை ஆசீர்வதித்தபோது! @actorvijay sir அன்புடன், உங்கள் நண்பி மற்றும் நண்பன் (sic). " எனபதிவிட்டிருந்தார். கீர்த்தியும், ஆண்டனியும் பள்ளிப்பருவ காதலர்கள் எனக்கூறப்படுகிறது. கொச்சியை சேர்ந்த ஆண்டனி, துபாயில் ரிசார்ட் சங்கிலியை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஜோடி 15 ஆண்டுகளாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் இரு வீட்டார் முறைப்படியும் நடைபெற்றது.
Twitter Post
தொழில் முறையில் கீர்த்தி சுரேஷின் பயணம்
கீர்த்தி சுரேஷ் 2017 ஆம் ஆண்டு வெளியான பைரவா மற்றும் 2018 ஆம் ஆண்டு சர்கார் படத்திற்காக தளபதி விஜய்யுடன் நடித்தார். தற்போது கீர்த்தி சுரேஷ், அட்லீ தயாரிப்பில் 'பேபி ஜான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். வருண் தவான் நடித்துள்ள இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தி சுரேஷின் திருமணத்தில், நடிகை த்ரிஷா, இயக்குனர் அட்லீ, அவரது மனைவி பிரியா மற்றும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், தெலுங்கு நடிகர் நானி மற்றும் அவரது மனைவி, அஞ்சனா ஆகியோர் கலந்துகொண்டதாக தெரிவித்தனர்.