விரைவில் தொடங்கும் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு?
செய்தி முன்னோட்டம்
கார்த்தி நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் உருவாக்கிய சர்தார் திரைப்படம், கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
உலக அளவில் ₹80 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இப்படம் தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் விநியோகஸ்தான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும் நல்ல லாபத்தை ஈட்டி தந்ததால், படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் பாகத்திற்கான கதையை மித்திரன் தயாரித்து வருவதாகவும், விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுவருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி உள்ளிட்ட சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
2nd card
அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் படப்பிடிப்பு
சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்குவதாக கூறப்படுகிறது.
மேலும் இரண்டாம் பாகத்திற்காக புதிய நாயகி ஒருவரும் படத்தில் இணைய உள்ளார். முதல் பாகத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் குமார் மாற்றப்பட்டு இரண்டாம் பாகத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்
படத்தில் 50% முதல் பாகத்தின் நடிகர்களும், 50% புது நடிகர்களும் நடிக்க உள்ளனர்.
கார்த்தி தனது அடுத்தடுத்த படங்களுக்காக நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோருடன் இணைந்துள்ளார். இப்படங்களின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்தார் 2 திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி, ஹெச் வினோத்துடன் தீரன் அதிகாரம் ஒன்று 2 திரைப்படத்திலும் நடிக்கிறார்.