கங்குவா படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் கூறுவது என்ன? சூர்யாவின் ரசிகர்கள் கொந்தளிப்பது எதற்காக?
செய்தி முன்னோட்டம்
சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நேற்று வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பலரும் படத்தின் சத்தமான பின்னணி இசையையும், மெதுவாக நகரும் திரைக்கதையை பற்றியும் ஒருமித்த கருத்தை தெரிவித்தாலும், படத்தில் சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
இருப்பினும் ப்ளூ சட்டை மாறன் கங்குவா படத்தின் மீது தொடர்ந்து தெரிவித்து வரும் விமர்சனங்கள் சூர்யாவின் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.
ப்ளூ சட்டை மாறன் படத்தை காண வரும் ரசிகர்களுக்கு தனது எக்ஸ் பக்கத்தில், "எல்லா விமர்சனமும் கழுவி ஊத்துறது இவரைத்தான். இருக்கற இசைக்கருவிகளை கத்த விட்டு போதாதுன்னு... அண்டா, குண்டா, தோசை கரண்டில கூட மியூசிக் போட்டு காதை கிழிச்சி இருக்காராம்ல" என்று பதிவிட்டுள்ளார்.
விமர்சனம்
படத்தின் நடிகர்களையும் விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்
மாறன் இதற்கு முன்னதாகவும், "படத்தில் கருணாஸ் முதல் கலைராணி வரை ஏன் கத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அது கூட ஸ்லோமோஷனில்! சேதமடைந்த செவிப்பறைகளுடன் படம் பார்க்கச் சென்றதற்காக வருந்துகிறேன். நிச்சயம் லோடு லோடாக பஞ்சு வேண்டும். படத்திற்கு கங்குவா என்ற பெயருக்குப் பதிலாக கத்துவா என்று வைத்திருக்கலாம். கத்தாம படம் பாருங்கப்பா... கத்துறதே படம்!" எனக் கருத்து தெரிவித்திருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது.
இது, சூர்யாவின் ரசிகர்களின் பக்கம் இருந்து ப்ளூ சட்டை மாறனுக்கு எதிரான விமர்சனங்களையும் ஈர்க்கிறது.
இந்த நிலையில் தன்னுடைய தமிழ் டாக்கீஸ் யூட்யூப் பக்கத்தில் படத்தை பற்றி அவர் விமர்சித்துள்ளதும் பல லட்சம் வ்யூஸ்களை பெற்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பெரியஸ்டாரகளின் உழைப்பு:
— Blue Sattai Maran (@tamiltalkies) November 15, 2024
கமல், விக்ரம், சூர்யாவை ஷங்கர், ரஞ்சித், சிறுத்தை சிவா வச்சி செஞ்சிட்டாங்க. பலமணி நேர மேக்கப், சிக்ஸ் பேக் உழைப்பு எல்லாம் வீணா போச்சி என உருகுவோரின் கவனத்திற்கு..
பெரியஸ்டார்களின் படங்கள் ஜெயித்தால் அதற்கு முக்கிய அல்லது முழு காரணமும் அவர்தான் என ஓவர்…
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Memories:
— Blue Sattai Maran (@tamiltalkies) November 15, 2024
கங்குவா பார்ட் 2 இன்னும் மிரட்டலாக இருக்கும். 2027 இல் வெளியாகும். அந்த தேதியில் எங்களுடன் போட்டி போட யாருக்கும் தைரியம் இருக்காது - ஞானவேல்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Devi Sri Prasad பயன்படுத்திய இசைக்கருவிகள். pic.twitter.com/pkrAD0XLGm
— Blue Sattai Maran (@tamiltalkies) November 14, 2024