
கங்குவா படத்திற்கு புதிய சிக்கல்; வெளியாவதில் தாமதம் ஏற்படுமா?
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நேரத்தில் பேரிடியாக இறங்கியது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு.
இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என கூறுகிறது செய்திகள்.
கங்குவா நவம்பர் 14ம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் கடன் பிரச்சனைகளால் தற்போது கங்குவா படத்தின் வெளியீட்டிற்கு புதிய தடைகள் ஏற்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | ₹20 கோடியை வரும் 13ம் தேதிக்குள் உயர் நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது - ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
— Sun News (@sunnewstamil) November 11, 2024
அர்ஜுன் லால் என்பவரிடம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக சொத்தாட்சியர் தாக்கல் செய்த வழக்கு… pic.twitter.com/cxTkcXQZBp
வழக்கு
வாராக்கடன் இருப்பதால் பணத்தை செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் வசித்து வந்த அர்ஜூன் லால் என்ற பைனான்சியரிடமிருந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ரூ. 20 கோடி கடன் பெற்றுள்ளது.
ஆனால், அர்ஜூன் லால் தற்போது காலமாகிவிட்டதாகவும், அவர் திவாலாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அவரிடம் இருந்து கடனாக பெற்ற தொகையை இன்னும் செலுத்தவில்லை என வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ரூ. 20 கோடி கடனை வரும் 13ம் தேதிக்குள் (நாளை) செலுத்தாவிட்டால் கங்குவா படத்தை வெளியிடுவதற்கான அனுமதி வழங்கமாட்டோம் என்று உத்தரவிட்டுள்ளது.
அதனால் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனினும் பல திரையரங்குகளில் படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் பணத்தை செலுத்தும்?