Page Loader
கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மரணம்; அதிர்ச்சியில் படக்குழு
எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மரணம்

கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மரணம்; அதிர்ச்சியில் படக்குழு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2024
09:40 am

செய்தி முன்னோட்டம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள "கங்குவா" படத்தில் எடிட்டராக பணியாற்றிய நிஷாத் யூசுப் இன்று காலை திடீரென காலமானார். அவருக்கு வயது 43. சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள "கங்குவா" படம், வரும் நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நிஷாத் யூசுப் மரணம் படக்குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொச்சியில் உள்ள அவரது அபார்ட்மெண்டில் இருந்து அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் என செய்திகள் கூறுகின்றனர். அவரது மரணத்திற்கு காரணமான விஷயம் இதுவரை தெரியவில்லை. நிஷாத் யூசுப் "கங்குவா" மட்டுமன்றி, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திற்கும் எடிட்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

சென்ற வருடம் ஆர்ட் டைரக்டர், இந்த வருடம் எடிட்டர்

எடிட்டர் நிஷாத் மலையாள திரையுலகிலும் பிசியாக பணியாற்றியவர். டொவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த "தல்லுமலா" படத்தில், பணியாற்றி புகழ் பெற்றார். இந்தப்படத்திற்கு அவர் கேரள மாநில விருதும் பெற்றார். தற்போது, மோகன்லால் நடிக்கும் "பசூகா" எனும் மலையாள படத்திற்கும் எடிட்டராக பணியாற்றியதாக கூறப்படுகிறது. நிஷாத் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கூட கங்குவா படத்தில் பணியாற்றியது குறித்து பதிவிட்டிருந்தார். தற்போது, அவரது திடீர் மரணம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு கங்குவா படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் பெர்னாண்டஸ் காலமானார், தற்போது எடிட்டர் காலமானதும், கங்குவா படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.